சினிமா

இயக்குனர் சங்கத் தேர்தல்: தலைவராகிறார் விக்ரமன்

இயக்குனர் சங்கத் தேர்தல்: தலைவராகிறார் விக்ரமன்

webteam

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் தலைவராக விக்ரமன், செயலாளராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இத்தேர்தலில் விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும் புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.கே செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக முரளி என்பவர் போட்டியிடுகிறார். இருந்தாலும் விக்ரமனும் ஆர்.கே.செல்வமணியும் தலைவர், செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடியும். மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 

அணி விவரம்: 
புது வசந்தம் அணி: தலைவர், விக்ரமன். செயலாளர், ஆர்கே செல்வமணி. பொருளாளர், பேரரசு. துணைத் தலைவர்கள், கேஎஸ் ரவிக்குமார், ஆர்வி உதயக்குமார். இணைச் செயலாளர்கள், ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், ஏ வெங்கடேஷ், அறிவழகன் (எ) சோழன்.

புதிய அலைகள் அணி: பொருளாளர் ஆ.ஜெகதீசன். துணைத் தலைவர், வி.சுப்பிரமணியம் சிவா. இணைச் செயலாளர், பி. பாலமுரளி வர்மன், ஜி ஐந்துகோவிலான், நாகராஜன், மணிகண்டன், ஆ.ராமகிருஷ்ணன்.