பழநி பாரதி முகநூல்
கோலிவுட் செய்திகள்

பாடலாசிரியர் பழநி பாரதியின் பிறந்தநாள் இன்று!

PT WEB

செய்தியாளர்: புனிதா பாலாஜி

பத்திரிகைத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த முக்கிய கலைஞன் பழநி பாரதி. பிரபல கவிஞர் சாமி பழனியப்பனின் மகனான இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். சென்னையில் படிப்பை முடித்த இவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் தொற்றிக் கொண்டது.

பழநி பாரதி

பத்திரிகையில் பணியாற்றி வந்த அவர், கவிதைகள் மூலம் தனக்குள் இருந்த கலைஞனை வெளியே கொண்டு வந்தார். பணிகளுக்கு இடையே நெருப்பு பார்வைகள் என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி, இலக்கிய உலகில் பாராட்டு பெற்றார் பழநிபாரதி. அவரின் பேனா பேசிய பேச்சும், எழுத்தின் வீச்சும் அவரை திரைத்துறை நோக்கி அழைத்துச் சென்றன. 1991ஆம் ஆண்டு வெளியான விக்ரமனின் பெரும்புள்ளி படத்தில் முதல் பாடலை எழுதினார், பழநிபாரதி.

அதன்பின் புதிய மன்னர்கள், முறை மாமன், மேட்டுக்குடி என பல வெற்றித் திரைப்படங்களின் பாடல்களுக்கு வரிகளை வடித்துக் கொடுத்திருக்கிறார், இந்த பாட்டுக் கவிஞன்.

தளபதியாக கொண்டாடப்படும் விஜய்க்கு திருப்புமுனை படைப்பாக அமைந்தது, பூவே உனக்காக திரைப்படம்.
பூவே உனக்காக திரைப்படம்.

அதில், பழநிபாரதி எழுதிய பாடல்கள் இன்றுவரை ரசிக்கப்படும் க்ளாசிக் ஹிட் வரிசை என்றே சொல்லலாம்.. கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா, சரத்குமாரின் சூர்யவம்சம், அஜித்தின் உல்லாசம், ரஜினியின் அருணாச்சலம் என முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் பாடல் எழுதினார் இவர்.

இந்த வரிசையில், இளையராஜா இசையில் உருவான, காதலுக்கு மரியாதை திரைப்படத்துக்கு என்றுமே தனி இடம் உண்டு. 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பழநிபாரதி, திரைப்பணிக்காக பல முக்கிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில், 1,500க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை எழுதி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் பழநிபாரதி, தன் தனித்துவ வரிகளுக்காக என்றும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.