THUG முகநூல்
கோலிவுட் செய்திகள்

‘THUG’ என்ற வார்த்தையை கேட்டாலே திக்கு இருக்கும் - இன்று இருக்கும் அர்த்தம் இல்லை.. அதன் வரலாறே தனி!

கேலியும், கிண்டலுமா தக் என்ற வார்த்தையை நாம பயன்படுத்தி கடந்து போனாலும், அந்த வார்த்தைக்கு பின்னாடி இருக்கறது ரத்தக்கறை படிஞ்ச, வரலாற்றின் கருப்பு பக்கங்கள்தான்.

PT WEB

BREAK THE RULES... இதுதான் THUG life -க்கான முதல் தகுதியே... சமூக வலைதளங்களில் எப்போதும் ட்ரெண்டிங்ல இருக்க இந்த வார்த்தை மறுபடியும் பேசு பொருளாகி இருக்கு. கமல்ஹாசனோட அடுத்த படத்தோட தலைப்பா இருக்கறதுதான், இப்போதைக்கு சோஷியல் மீடியாவுல THUG life ஆ போகிட்டு இருக்கு...

THUG life

கேலியும், கிண்டலுமா ’தக்’ என்ற வார்த்தையை நாம பயன்படுத்தி கடந்து போனாலும் அந்த வார்த்தைக்கு பின்னாடி இருக்கிறது ரத்தக்கறை படிஞ்ச, வரலாற்றின் கருப்பு பக்கங்கள்தான். இன்றைய சமூகவலைதளங்களாலதான் THUG life பிரபலமா இருக்கறதா நீங்க நினைக்கலாம். ஆனா, இந்த வார்த்தை 1800களிலேயே மிகவும் பிரபலம். இந்தியாவில் இருந்து பிரிட்டன் வரை ‘THUG’ என்ற பெயரை கேட்டாலே திக் என இருக்கும்.

THUG life

அந்த அளவிற்கு கொடூரமான பல நிகழ்வுகளின் பிண்ணனியில் இருந்தவர்கள் தக்கிகள். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கொள்ளை தொழில் செய்பவர்களாக இருந்தவர்கள் தக்கிகள். ராஜஸ்தான் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த அவர்கள், வனத்தை ஒட்டிய பகுதியில் பயணிக்கும் வணிகர்களை குறிவைத்து தாக்கி கொள்ளையடித்து வந்தனர்.

கொள்ளையின்போது இடையூறாக எது வந்தாலும் எவர் வந்தாலும் அது தக்கிகளுக்கு பொருட்டு அல்ல.. கொடூர கொலைகள்.. மூட்டை மூட்டையாக நகை, பணம் கொள்ளை என தக்கிகளின் மூர்க்கம், இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

அவர்களை கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. பிரிட்டிஷ் ஆளுநர் லார்ட் வில்லியம் பெண்டிங், கேப்டன் வில்லியம் ஸ்லீமன் ஆகியோர் தலைமையில் கூட்டம் கூட்டமாக தக்கிகள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பல்லாயிரம்பேர் சிறையில் கொடூர சித்திரவதைகளுக்கு பின் இறந்தனர். அதில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் தங்கள் தொழிலில் இருந்து விடுபடவில்லை.. முன்பை விட அதிக மூர்க்கத்தோடு தங்கள் வேட்டையை தொடர்ந்தனர்.

தக்கிகள்

பின்விளைவை நினைத்து பார்க்காத.. துணிவான.. அதே சமயம் நேர்மையற்ற அந்த கூட்டத்தை குறிப்பிட்டு பயன்படுத்தப்பட்ட சொல்தான் ‘THUG’. இதுவே பிற்காலத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி, எதை குறித்தும் கவலையின்றி நினைத்ததை செய்வோரை குறிப்பிடும் சொல்லாகி போனது. 20ஆம் நூற்றாண்டில் பாப் இசைக்கலைஞர் டுபக் ஷாக்கூர் தன் உடலில் THUG life என பச்சை குத்த இளைஞர்கள் மத்தியில் அந்த வார்த்தை மிகவும் பிரபலமாகி போனது. மீம்களில் பார்ப்பது போல தொப்பி, கண்ணாடி, கொத்தாக செயின் அணிந்துதான் தக் லைஃப் நபர்கள் வலம் வர வேண்டியது இல்லை.

இன்றைய சூழலில் நேர்மையான செயலை துணிந்து செய்வதே THUG life-தான்.. கமல்ஹாசனின் THUG life எதை சொல்லப்போகிறது என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்..