Naa ready song Sony music south you tube
கோலிவுட் செய்திகள்

’புகை, மதுவை ஊக்குவிக்கிறது ‘நா ரெடி’ பாடல்’ - விமர்சனங்களை அடுத்து ‘லியோ’ படக்குழு செய்த மாற்றம்!

சங்கீதா

விஜய்யின் 67-வது படமாக தயாராகி வருகிறது ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் இருந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது.

ஆர்த்தி ஐ செல்வம் புகார்

இதற்கிடையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ‘நா ரெடி’ என்ற முதல் பாடல் வெளியானது. இந்தப் பாடலில் பெரும்பாலான காட்சிகளில் நடிகர் விஜய் புகைப் பிடிப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவதை ஊக்குவிப்பது போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்த்தி ஐ செல்வம், ‘நா ரெடி’ பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்க வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், யூ-ட்யூப் தளத்தில் இந்தப் பாடலின் வீடியோவில் விஜய் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் இடங்களில் எல்லாம் எச்சரிக்கை வாசகங்கள் ‘புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும். உயிரை கொல்லும்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

அதேநேரத்தில், ‘பத்தாது பாட்டில்... நான் குடிக்க.. அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க..’, ‘மில்லி உள்ள போனபோதும்... கில்லி வெளில வருவான் டா...’ என்ற பாடல் வரிகள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் மதுவை கையில் வைத்திருப்பது போன்ற காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை.