Rajini  @sunpictures
கோலிவுட் செய்திகள்

‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு! தள்ளிப் போகிறதா மாவீரன்?

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சங்கீதா
உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ரஜினியின் 169-வது படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மோகன்லால், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் கதாபாத்திரங்கள் டீசரில் கவனம் ஈர்க்கின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, எண்ணூர், கடலூர், ஹைதராபாத், ராஜஸ்தான், மங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக சிறு டீசருடன் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையின்போது ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 2002 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி தோல்வியடைந்த ‘பாபா’ திரைப்படம் சென்டிமென்ட் காரணமாக இந்தப் படம் (ஜெயிலர்) செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அதனை பொய்யாக்கி, ஆகஸ்ட் மாதத்திலேயே திட்டமிட்டப்படி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்தால் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் கசிந்து வருகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.