கங்குவா டிரெய்லர் web
கோலிவுட் செய்திகள்

இது கங்குவாவா? இல்லை பாகுபலியா?.. வெளியான சூர்யாவின் ’கங்குவா’ பட டிரெய்லர்! நெட்டிசன்கள் ட்ரோல்!

நடிகர் சூர்யாவின் கங்குவா பட டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், படத்தின் டிரெய்லரில் பாகுபலியின் வாடை அடிப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவருகின்றனர்.

Rishan Vengai

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் உருவாகியுள்ளது.

Kanguva Poster

படத்தின் கதையை பொறுத்தவரையில், 14 ஆம் நூற்றாண்டை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் 20 சதவீதம் வரலாற்றையும் 80 சதவீதம் கற்பனையும் அடிப்படையாக கொண்டு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலகட்ட நடைமுறைகளான இறைவழிபாடுகள், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கங்குவா என்பதற்கு நெருப்பில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ட்ஸ் லுக், கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் என வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தின் டிரெய்லரானது ஒரு விசூவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் படத்தின் டிரெய்லரை கொண்டாடிவருகின்றனர்.

டிரெய்லர் எப்படி இருக்கிறது?

இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான இன்று கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

கங்குவா

டிரெய்லர் எப்படியிருக்கிறது என்று பார்த்தால், “நாம் வாழும் தீவுக்குள்ள பல மர்மங்கள் கொட்டிக்கிடக்கு” என தொடங்கும் டிரெய்லரானது முழுக்க முழுக்க காட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கிறது. 14ம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் படம் என்பதால் சண்டைக் காட்சிகளும், சாகச காட்சிகளும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன. பின்னணி இசையும், சினிமடோகிராஃபியும் அசத்தலாக இருக்கிறது.

கங்குவா

ஒருபுறம் “விருந்து அருந்த வாரீரோ, சாவு எறங்குற மாதிரி அவன்மேல இறங்கி மண்டையோட்டுல ரத்தத்தை நிரப்பி கொண்டுவா”என மிரட்டும் தோணியில் பாபி தியோல் பேசுகிறார்.

இதையும் படிக்க: உலக வரைபடத்தில் சிறிய நாடு! இழப்புகளின் வலிகளை சுமந்து தங்கம் வென்று வரலாறுபடைத்த 23 வயது வீராங்கனை!

கங்குவா

மறுபுறம் “பெருமாச்சி மண்ணே” என கத்தும் சூர்யா, “உன் ரத்தமும் என் ரத்தமும் வேறா” என்ற வசனங்களை பேசுகிறார். விறுவிறுப்பான சண்டை காட்சிகளுடன், ஒவ்வொரு ஃபிரேமும் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இறுதியாக மண்டைஓட்டுக்களை சிதறவிட்டு குதிரையில் வரும் இன்னொரு நபர் வருவதை சூர்யா பார்ப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது.

கங்குவா

மற்ற சினிமா இண்டஸ்ட்ரிகள் 1000கொடி படங்களை கொடுத்துவரும் நிலையில், இன்னும் தமிழ்சினிமா மட்டுமே ஆயிரம் கோடியை ஈட்டும் படத்தை கொடுக்கமுடியாமல் தடுமாறிவருகிறது. ‘கங்குவா’ அந்த குறையை தீர்க்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், டிரெய்லரும் அனைவரையும் கவரும் வகையிலேயே இருக்கிறது.

பாகுபலியுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..

கங்குவா டிரெய்லர் எல்லா தரப்பினரையும் கவர்ந்தாலும், சிலபேர் டிரெய்லர் இடம்பெற்ற சில காட்சிகளை ஒப்பிட்டு பாகுபலியை போல இருக்கிறதே என்ற எண்ணத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல சூர்யா பேசும், “அறுபட்ட என் சிரம் மண் உருண்டாலும் உருளும்... முன் நெற்றியும், முழங்காலும் மண் தொடா... மண்டியிடா” என்ற வசனமும், அவரை தேடியலையும் ஒரு கும்பலும், சூரா சூரா என இடம்பெறும் பாடல் வரிகளும், ஒரு பெரிய வில்லனுக்கு எதிரான போராட்டமாகவே கதையை பிரதிபலிக்கிறது. அடிமைப்படுத்துவது, அவருக்கு எதிராக போராடுவது என ஒன்லைன் ஸ்டோரியாக இது இருந்துவிடக்கூடாது என்றும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல இறுதியாக மண்டை ஓட்டுக்களை சிதறவிட்டு கடைசியாக குதிரையில் வரும் இன்னொரு நபர் சூர்யாவின் தம்பி கார்த்திதான் எனவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். எப்படியிருப்பினும் தமிழ் ரசிகர்கள் ரூ 1000 கோடி தமிழ்ப்படம் என்ற எதிர்ப்பார்ப்பை கங்குவா படத்தின் மீது வைத்துள்ளனர். படம் எப்படி ரசிகர்களை கவரப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.