அஜித், பிரசாந்த் நீல் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறாரா அஜித்? அமர்க்களமாக வந்த அடுத்த பட அப்டேட்!

ET desk

சோஷியல் மீடியாக்களில் இல்லை, ரசிகர் மன்றம் இல்லை.. ஆனாலும் அஜித்திற்கான மாஸ் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. துணிவு வெற்றியைத் தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் சில ஆண்டுகளாக நடித்துவருகிறார் அஜித். அதில் சில சிக்கல்கள் எழ, கிடைத்த கேப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY திரைப்படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது விடாமுயற்சியில் அஜித்தின் பகுதிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், அஜித் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற பேச்சுகள் கோலிவுட்டில் எழத் தொடங்கின.

விடாமுயற்சி திருவினையாக்கும்

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அமர்க்களமாக வந்திருக்கிறது ஒரு மாஸ் அப்டேட். அதன்படி பிரசாந்த் நீலுடன் இணையவிருக்கிறாராம் அஜித்!

KGF 2 திரைப்படம் முடிந்ததும், எல்லொரும் திரையில் இருந்து வெளியேறும் சமயம், அடுத்த பாகத்துக்கான லீடை வேற லெவலில் வைத்துவிட்டு அந்த பாகத்தை முடித்திருப்பார்கள். KGF UNIVERSEல் இருந்து வெளியே வந்து பிரபாஸுடன் சலார் படத்தை இயக்கி, அதையும் ஹிட் ஆக்கினார் பிரசாந்த் நீல். தற்போது, ஜூனியர் NTR படம், ராம் சரண் படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் பிரசாந்த் நீல்.

ஆனால் இந்த இரண்டு படங்களுக்கு முன்பாகவே அஜித்தை வைத்து இரண்டு படங்கள் இயக்கவிருக்கிறாராம் பிரசாந்த் நீல்.

ஜூனியர் NTR வேறு படத்தில் பிஸியாக இருப்பதால், பிரசாந்த் நீலுடன் கமிட்டாகியிருக்கும் படம் இன்னும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கிறார்கள். அஜித்தை வைத்து இயக்கும் இரண்டு படங்களில் முதல் படம் எந்தவித யுனிவர்ஸுக்குள்ளும் இல்லாமல் தனிப்படமாக உருவாகுமாம். இரண்டாவது படம் கிட்டத்தட்ட KGF யுனிவர்ஸுக்குள் இருக்கும் படமாக அமையும் என்கிறார்கள்.

அஜித், பிரசாந்த் நீல்

அதில் நடிகர் யஷ் தொடர்பான காட்சிகளும் இருக்குமாம். அதைத் தொடர்ந்து KGF-3ஐ பிரமாண்டமாக இயக்கவிருக்கிறாராம். GOOD BAD UGLY ஷூட்டிங் முடிந்த பின்னர், இந்த படத்துக்கான ஷூட்டிங், அதாவது 2025ம் ஆண்டு நடக்கவிருக்கிறதாம்.

எல்லாமொழியிலும் ஆயிரம் கோடி வசூல் என பில்ட் அப் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் பெரிய ஹிட் படம் வந்தே சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த குறையை எல்லாம் நிச்சயம் அஜித் - பிரசாந்த் நீல் காம்போ போக்கும் என உறுதியாக நம்புகிறார்கள் அஜித் ரசிகர்கள்.