Sakshi agarwal pt desk
கோலிவுட் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகை சாக்ஷி அகர்வால் சுவாமி தரிசனம்

webteam

செய்தியாளர்: பே. சுடலைமணி செல்வன்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Actress Sakshi agarwal

இந்த நிலையில் அரண்மனை 3, பஹீரா, டெடி, காலா, ராஜா ராணி, விசுவாசம் உட்பட பல தமிழ் படங்களிலும் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகையும் பிக்பாஸ் 3 மூலம் பிரபலமானவருமான சாக்ஷி அகர்வால் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார்.

இதையடுத்து தான் நடித்துள்ள ராயன், தங்கலான், அந்தகன் படம் வெற்றி பெற வேண்டியும், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் இன்று வெளியாக உள்ளதாகவும் அந்த படம் வெற்றியடைய வேண்டியும் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். கோவிலுக்கு வெளியே வந்த நடிகை சாக்ஷி அகர்வாலுடன் பக்தர்கள், பெண்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.