மாமன்னன் நன்றி விழா PT Desk
கோலிவுட் செய்திகள்

“படத்தில் நீங்க இத மட்டும் செய்யக்கூடாதுனு...” - ‘மாமன்னன்’ குறித்து நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி

“30 படம் எடுத்தது போன்ற அனுபவத்தை கொண்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் வாழ்வில் போராடி வந்ததால், படத்தில் அந்த வலியை அப்படியே வைத்துள்ளார்.”

PT WEB

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் வெற்றியையொட்டி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் வடிவேலு பேசியதாவது,

“இந்த கதையின் மாமன்னன் யார் என்றால் இயக்குநர் மாரி செல்வராஜ், இந்தப் படத்தை எடுத்த மன்னாதி மன்னன் உதயநிதி ஸ்டாலின். 30 படம் எடுத்தது போன்ற அனுபவத்தை கொண்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் வாழ்வில் போராடி வந்ததால், படத்தில் அந்த வலியை அப்படியே வைத்துள்ளார். படத்தில் சிரிக்கவே கூடாது என்று சொல்லித்தான் இயக்குநர் என்னை நடிக்க வைத்தார்.

படத்தை பார்த்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு போன் செய்து, ‘10 முறை பிரமாதம்’ என்று சொன்னார். ‘அருமையாக நடித்து இருக்கீங்கனு’ சொன்னார். அதுவும் இரவு 11 மணிக்கு போன் செய்து கூறினார். இதேபோன்று ரஜினி போன் செய்து வாழ்த்தினார். கமலும் வாழ்த்தினார். இந்த படத்தில் நான் மட்டும் ஹீரோ என்று சொல்வது தவறு. இயக்குநர் தான் ஹீரோ” இவ்வாறு வடிவேலு பேசினார்.