Sharwanand-Rakshita Reddy @memorylanes_by_sumanchakri instagram
கோலிவுட் செய்திகள்

நடிகர் சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமணம்: பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு விழா!

சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி வரவேற்பு விழாவில், ராம் சரண் தனது மனைவியுடன் வந்து கலந்துகொண்டார்.

சங்கீதா

‘நாளை நமதே’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சர்வானந்த். இவருக்கும், சாப்ட்வேர் என்ஜினீயரான ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி ஹைதராபாத்தில், நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ரக்ஷிதா ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் போஜாலா கோபாலகிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், ஆந்திரப்பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மதுசூதன ரெட்யின் மகளும் ஆவார். இவர்களின் நிச்சயதார்த்த விழாவில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விரைவில் திருமண தேதியை அறிவிப்பதாக இருந்த நிலையில், சர்வானந்த்-ரக்ஷிதா ரெட்டி திருமணம், நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டதாக கடந்த மாதம் செய்திகள் பரவின. ஆனால், இதனை நடிகர் சர்வானந்தின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்த நிலையில், கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் லீலா பேலஸில் கோலகலமாக திருமண சடங்குகளும், திருமணமும் நடைபெற்றது. ஜூன் 2-ம் தேதி சங்கீத், மெகந்தி விழாக்கள் நடந்த நிலையில், 3-ம் தேதி இரவு 11 மணியளவில் திருமணம் நடைபெற்றது.

இதிலும் திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட நிலையில், நேற்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக வரவேற்பு நடைபெற்றது. சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி வரவேற்பு விழாவில், ராம் சரண் தனது மனைவியுடன் வந்து கலந்துகொண்டார். மேலும், நடிகர் ராணா, நந்தாமூரி பாலகிருஷ்ணா, அல்லரி நரேஷ், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.