ராகவா லாரன்ஸ் ட்விட்டர்
கோலிவுட் செய்திகள்

“இனி என் திரைப்பயணம் வேறமாதிரி இருக்கும்” - நடிகர் ராகவா லாரன்ஸ்

“இனி எனது திரைப்பயணம் வேறு மாதிரி இருக்கும்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படத்தில் தனது வழக்கமான பாணியிலிருந்து சற்று மாறுபட்ட தோற்றத்தில், லாரன்ஸ் களம் இறங்கியுள்ளார். இதனால் நடிகர்கள், இயக்குநர்கள் என பலரின் பாராட்டையும் அவர் பெற்று வருகிறார். மக்கள் மத்தியிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதையடுத்து நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தாண்டிக்குடி மக்களோடு சேர்ந்து மதுரை செல்லூரியில் உள்ள திரையரங்கில் தங்களின் படத்தை நேற்று கண்டுகளித்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திற்கு வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா

பின் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “பொதுவாக வசூலில் சாதனை படைக்கும் திரைப்படம் நல்ல பெயரை எடுக்காது. நல்ல பெயரை எடுக்கும் படம் வசூலில் சாதிக்காது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் X படக்குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிவு

மேலும் மக்கள் திரைப்படங்களை வரவேற்கும் விதமும், திரைப்படம் பார்க்கும் தரமும் தற்போது வளர்ந்துள்ளது. இதனால் content உருவாக்குபவர்களுக்கு மேலும் உத்வேகம் கிடைக்கும்”

நடிகர் லாரன்ஸ்:

“இதற்கு முன்பு வரை இருந்த ராகவா லாரன்ஸ் திரைப்படத்தின் பின்னணி என்பது வேறு விதமாக இருக்கும். ஆனால் இதற்கு பின் அது மாறும் என்று நானே ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். படத்தை நான் பார்க்கும் போது, இயக்குநர் மீது எனக்கு ஏற்பட்ட நம்பிக்கையின் விளைவாக இதனை தெரிவித்திருந்தேன்.

அதையே பார்வையாளர்களும் தற்போது கூறும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தபோது இன்னும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் ரஜினி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டு, படக்குழுவை நேரில் சந்தித்து தன் பாராட்டை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.