தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இருந்து ஒதுங்கவில்லை என கூறியுள்ள டி ராஜேந்தர் ஒரு தாடியை தோற்கடிக்க எத்தனை கோடி என கேள்வியெழுப்பினார்.
வாலு படத்தின் வெளியீடு தாமததிற்கு தயாரிப்பாளர் சங்கம் தான் காரணம் கூறிய டி ராஜேந்தர் ஒரு தாடியை தோற்கடிக்க எத்தனை கோடி? என்று கேள்வியெழுப்பினார். “தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் இருந்து டி ராஜேந்தர் ஒதுங்கி விட்டதாக பலரும் நினைத்தனர். ஆனால் நான் ஒதுங்கவில்லை. பதுங்கினேன். புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்” என கூறினார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கினார்.
வாலு படத்தின் வெளியீட்டின் போது தயாரிப்பாளர் சங்கம், தன்னை கடன் வாங்க வைத்ததாகவும் அதனை சன் நிறுவனத்திடமிருந்து விரைவில் வாங்கி தருவதாக வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் அந்த பணத்தை பெற்று தர தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் டி ராஜேந்தர் குற்றம்சாட்டினார். இப்படிப்பட்ட சங்கம் எப்படி தயாரிப்பாளர்களின் தலையெழுத்தை மாற்றும் எனவும் டி ராஜேந்தர் கேள்வியெழுப்பினார்.