சினிமா

என் வாழ்க்கையில் அது பெரிய தவறு’: முதல் திருமணம் பற்றி ஸ்வேதா மேனன் பேட்டி

என் வாழ்க்கையில் அது பெரிய தவறு’: முதல் திருமணம் பற்றி ஸ்வேதா மேனன் பேட்டி

webteam

தனது முதல் திருமணம் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.

தமிழில், ’நான் அவன் இல்லை 2’, ’அரவான்’, ‘துணை முதல்வர்’ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். பல இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் முதலில் பாபி போன்ஸ்லே என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை 2011-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சபைனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மலையாள இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது முதல் திருமணம் பற்றி அவர் பரபரப்பாகக் கூறியுள்ளார். 

(கணவர் ஸ்ரீவல்சன் மேனன், மகள் சபைனாவுடன் ஸ்வேதா)

அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாபியுடனான என் முதல் திருமணம் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. இதுபோன்று யாருக்கும் நடக்கக் கூடாது. அப்போது சினி மா மற்றும் மாடலிங் தொழிலுக்காக மும்பையில் இருந்தேன். என்னை என் பெற்றோர் சுதந்திரமாக வளர்த்தனர். எனக்கு வேண்டிய அளவு சுதந்திரம் அளித்தனர். இதை பாபி பயன்படுத்திக்கொண்டார். என் தந்தை கடுமையானவராக இருந்திருந்தால் அந்த திருமணம் நடந்திருக்காது. என் பெற்றோர், நான்கு சுவற்றுக்குள் அடைந்துவிடக் கூடாது என்று என்னை சுதந்திரமாக வளர்த்தனர். 

(வலது ஓரம், முதல் கணவர் பாபி)

யாரையும் சார்ந்து இல்லாமல் தனியாக, நான் வாழவேண்டும் என்பதற்காக அப்படி வளர்த்தனர். மும்பையில் நான் இருந்தபோது அவர்களும் என்னுடன் இருந்து எனக்கு ஆலோசனை காட்டி வழிநடத்த வேண்டும் என்று நினைத்தேன். வரவில்லை. நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனியாக இருப்பேன். 

இந்த தனிமைதான், நான் காதலில் விழ காரணமாக அமைந்துவிட்டது. அந்த திருமணத்தில் அப்பாவுக்கு விருப்பம் இல்லை. அவருக்கு தயக்கம் இருந்தது. நான் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்தபோது, அவர் ‘இதை நினைத்து பின்னால் வருந்துவாய்’ என்று சொல் லிக் கொண்டே இருப்பார்.

அவர் சொன்னதுதான் நடந்தது. அவர் சொன்ன மாதிரி விவாகரத்தும் நடந்தது. இப்போது கூட என் கணவரை நான் விவாகரத்து செய்யப் போவ தாக வதந்திகள் பரவுகின்றன. அவ்வப்போது இப்படி வந்து செல்லும். ஆரம்பத்தில் இதுபோன்ற வதந்திகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பே ன். இப்போது சிரித்துக்கொண்டு கடந்துவிடுவேன்.
இவ்வாறு ஸ்வேதா மேனன் கூறினார்.