சினிமா

மீண்டும் டேக் ஆஃப் ஆகும் ‘சங்கமித்ரா’

மீண்டும் டேக் ஆஃப் ஆகும் ‘சங்கமித்ரா’

webteam

சுந்தர் சி இயக்கி வரும் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

காமெடி திரைக்கதைகள் மூலம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுப்பவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் கடந்த வருடம் நடைபெற்ற கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமான படமான ‘சங்கமித்ரா’ படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதனை அடுத்து அதற்கான படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. வரலாற்று படமாக எடுக்கப்பட்டு வரும் இதில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா படானி எனப் பலர் நடித்து வந்தனர். 

முதலில் இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதற்காக அவர் லண்டன் சென்று வாள் சண்டை கற்று வந்தார். இறுதியில் அவர் படத்தில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முறைப்படி அவருக்கு கதை விளக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். அதை பற்றி கருத்து சொன்ன படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் ‘அது அவரது விருப்பம்’ என்றது. அவருக்கு பதிலாகவே திஷா படானி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  
இதனை அடுத்து படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் ‘கலகலப்பு2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் குஷ்பு ட்வீட் போட்டார். அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவே ‘சங்கமித்ரா’ தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் மீண்டும் ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தச் செய்தியை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். சாபு சிரில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.