அமரன் திரைப்படத்தில், நடிகை சாய் பல்லவி ஒரு துண்டு சீட்டில் தனது தொலைப்பேசி எண்ணை கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த தொலைப்பேசி எண், சென்னையை சேர்ந்த வாகீசன் என்ற மாணவர் பயன்படுத்தி வரும் நிலையில், சில நொடிகள் மட்டுமே வந்த அந்த காட்சியால், மாணவர் வாகீசன் பல நாட்களாகவே தூங்க முடியாமல் தவித்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு வாழ்த்துக்கூற வேண்டும் என்ற எண்ணத்தில், பலரும் தொடர்ந்து வாகீசனை தொலைப்பேசியில் அழைப்பதாக கூறப்படுகிறது.
இதனால் செய்வதறியாமல் தவிக்கும் வாகீசன், திரைப்படக் குழுவினரை சமூக வலைத்தளம் மூலம் தொடர்புகொள்ளவும் முயற்சித்துள்ளார். எனினும், படக்குழுவினரிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.