சினிமா

அனிமேஷனில் வெளியான ஸ்பைடர்மேன் ஆஸ்கருக்கு பரிந்துரை

அனிமேஷனில் வெளியான ஸ்பைடர்மேன் ஆஸ்கருக்கு பரிந்துரை

webteam

சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ''ஸ்பைடர் மேன் இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்'' ஆஸ்கர் விருதுக்கான சிறந்த அனிமேஷன் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கற்பனையில் மட்டுமே நினைத்துப் பார்க்கக் கூடிய விஷயங்களை கண் முன்னே திரையில் நிகழ்த்தி காட்டுபவர்கள் தான் சூப்பர் ஹீரோக்கள். கற்பனையான விஷயங்களை நிகழ்த்திக் காட்டும் இந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கெல்லாம் ஜாம்பவானாக திகழ்வது ஸ்பைடர் மேன். உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களை ஈர்த்த ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் புது அவதாரமாக அனிமேஷன் வடிவில் கடந்த ஆண்டு ''ஸ்பைடர் மேன் இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்'' என்ற பெயரில் திரைப்படம் வெளியானது.மைல்ஸ் மொரல்ஸ் என்ற சிறுவனை ரேடியோ ஆக்டிவ் சிலந்தி ஒன்று கடித்து விடுகிறது. அதன் பின் அவன் ஸ்பைடர்மேனாக மாறுவது தான் இந்தத் திரைப்படத்தின் கதை.

ஒரு காமிக் புத்தகத்திற்குள் ரசிகர்கள் ஆழ்ந்து விடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது தான், இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தவிர, 70 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு புதவித அனுபவத்தை தந்தது‌. ‌

பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், 10 ‌விநாடி காட்சிகளை படமாக்குவதற்கே, பல மாதங்கள் பிடித்தாக தெரிவிக்கின்றனர் தயாரிப்பாளர்கள். மொத்தம் 142 அனிமேஷன் கலைஞர்கள் இந்தப் படத்துக்காக இரவு பகலாக உழைத்திருக்கின்றனர்.