இஸ்லாமியர்களின் அதிகாலை தொழுகை தூக்கத்தை கெடுப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் பாடகர் சோனு நிகம் செய்தியாளர் சந்திப்பின் போதே மொட்டை அடித்தார்.
பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகம், இஸ்லாமியர்களின் அதிகாலை தொழுகை ஒலிபெருக்கியில் ஒலிப்பது, தூக்கத்தை கெடுப்பதாகவும், இது ஒரு கட்டாய மதத் திணிப்பு எனவும் டிவிட்டரில் பதிவிட்டார். இதற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துக்கள் வெளியான நிலையில், சோனு நிகத்தின் தலைக்கு மொட்டை அடிப்பவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பேன் என கொல்கத்தாவை சேர்ந்த மதகுரு ஒருவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சோனு நிகம் மொட்டை அடித்து கொண்டதோடு, தான் எழுப்பியது சமூக பிரச்னையே என்றும் அதனை மதத்தோடு தொடர்பு படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.