சினிமா

ஊரடங்கில் நம்பிக்கை அளித்த பாடல்கள்... ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த பி.சி. ஸ்ரீராம்

webteam

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் என்னதான் செய்யமுடியும்? பலருக்கும் இசையும் பாடல்களுமே தற்காலிக துன்பச் சுழலில் இருந்து மீள பேருதவியாக இருந்துள்ளன. பிரபலங்களும் அதில் விதிவிலக்கல்ல. குடும்பம், உடற்பயிற்சி, சமையல் கலை, புத்தக வாசிப்பு என அவரவர் விருப்பத்திற்கேற்ப நேரத்தைச் செலவிட்டுள்ளார்கள்.

சமூகவலைதளங்களில் அவ்வப்போது உற்சாகப்படுத்தும் பதிவுகளை வெளியிட்டுவந்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இந்த நாட்களில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் வாழ்க்கையைக் காப்பாற்றும் விதத்தில் இருந்ததாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கு நாட்களை நம்பிக்கையுடன் கடத்துவதற்கு அந்தப் பாடல்கள் மிக முக்கிய பங்கு வகித்ததாகவும் குறிப்பிட்டுள்ள பி.சி. ஸ்ரீராம், தற்போது இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். அதேபோல ஓர் இணையத் தொடரிலும் பணியாற்றுவதாக ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தார்.