இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கருக்கு தெரிவித்துள்ள ஆசிரியர் தின வாழ்த்து வேறொரு பக்கத்தில் இருந்து சுடப்பட்டது என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
ஆசிரியர் தினம் நேற்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் அல்லது குரு என ஒருவர் இல்லாமல் யாருமே இருக்கமாட்டார்கள். பள்ளிக்கூடத்திற்கே போகாத ஒருவருக்குக்கூட தொழில் குரு என ஒருவர் இருப்பார். அந்த வகையில் குரு என ஒருவர் இல்லாமல் யாருமில்லை என்பதால், நேற்றைய ஆசிரியர் தினம் அனைவருக்கும் பொருந்தும். அந்த வகையில் பலரும் தனது ஆசிரியர் மற்றும் குருவிற்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர்கள் சிலர் கூட தங்கள் கிரிக்கெட் குருவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரபலங்கள் பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இயக்குநர் அட்லி தனது திரைத்துறை குருவான இயக்குநர் சங்கருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read Also -> மேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..!
அதில், “வருடத்திற்கு ஒருமுறை ஆசிரியர் தினம் வருகிறது. ஆனாலும் நீங்கள் கற்றுக்கொடுத்தது தினந்தோறும் எனக்கு உதவுகிறது. நான் என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சங்கர் சார்” என தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தை ஆரம்பத்தில் பலரும் பாராட்டினர். மனதில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ள வாழ்த்து எனவும் கூறினர்.
Read Also -> பாஜக சார்பில் போட்டியா- என்ன சொல்கிறார் மோகன்லால்?
ஆனால் அதற்குள் சிலர் ‘நெக்ஸ்ட்இன்கெரியர்’ (NextInCareer) என்ற பக்கத்தில் இருந்து சுடப்பட்டது என விமர்சித்தனர். மேலும் அந்தப்பக்கத்தில் வெளியாகியிருந்த பதிவையும், அட்லியின் பதிவையும் இணைத்து வெளியிட்டனர். இதன்பின்னர் பல நெட்டிசன்கள் உள்ளே புகுந்து, “ஏன் பா உன் படம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா..!” என வறுத்தெடுத்தனர். இன்னும் வறுத்துக்கொண்டு இருக்கின்றனர்.