திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்களின் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடப்போவதாக பாடகி சுதித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகும் பதிவுகள் மற்றும் புகைப்படங்களால் சில நாட்களாகவே சர்ச்சை நீடிக்கிறது. நேற்று சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்டிரியா , ஹன்சிகா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. சமூக வலைதளங்களில் அதிகமானவர்கள் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்தும் விவாதித்தும் வந்ததால் சுசித்ராவின் டிவிட்டர் பதிவுகள் ட்ரெண்டாகின. இந்த நிலையில் அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் விளக்கமளித்தார்.
சுசித்ராவும் தனது டிவிட்டர் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் , தனது டிவிட்டர் கணக்கை டிஆக்டிவேட் செய்யப்போவதாகவும் பதிவிட்டார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களில், த்ரிஷா, தனுஷ், அனிருத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள வீடியோக்களை வெளியிடப் போவதாக மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், கூவத்தை விட மோசமானது சினிமா இன்ட்ஸ்ட்ரி என்றும், தனது பதிவுகளுக்கு எதிராக கோலிவுட்டில் உள்ள எந்த நடிகரும் கேள்வி எழுப்ப முடியுமா? என்பன போன்ற கேள்விகளும் அவரது டிவிட்டர் பதிவுகளில் எழுப்பப்பட்டுள்ளன.
இதுபற்றி சுசித்ரா, ‘எனது டிவிட்டர் தளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் முடக்கப்பட்டது. என்னை உண்மையாக பின் தொடர்பவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வையுங்கள். நாம் இதை வெல்வோம்’ என்று கூறியுள்ளார்.