சிம்பு கெட்டவன் படத்தை இயக்கி நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
சிலமாதங்களுக்கு முன் சிம்புவின் நடிப்பில் வெளியான ’ஏஏஏ’படம் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து பட வாய்ப்புகள் அமையாத நிலையில், 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட கெட்டவன் படத்தை சிம்பு மீண்டும் தொடங்க இருக்கிறார் எனக் கூறப்பட்டது. பில்லா 3ம் பாகத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கெட்டவன் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிம்பு ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என தெரிவித்துள்ளதோடு இப்படத்தை டி.ஆர் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், யுவன்சங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார். அத்துடன் ‘ஏழு முறை தோற்றவன் எட்டாவது முறை எழுவான்’ எனத் தெரிவித்துள்ள சிம்பு மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கெட்டவன் படத்தை 2007ல் தொடங்கிய சிம்பு 40 சதவீத படத்தை முடித்து விட்டார். சில காரணங்களால் அப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தில் நமீதா, லேகா வாஷிங்டன் ஆகியோர் நடித்திருந்தனர். தான் இயக்கி நடித்திருந்த இந்தப் படத்தை மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்திருக்கிறார் சிம்பு. லேகா வாஷிங்டன் ஃபீல்டு அவுட்டாக்கி விட்டார். அதே போல் நமீதா முதுமைத் தோற்றத்தில் இருக்கிறார். அவர்கள் இருவரையும் மீண்டும் நடிக்க வைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வேறு நடிகைகளை வைத்து மீண்டும் அவர் முழுப்படத்தையும் இயக்குவரா என்பது விரைவில் தெரியவரும்.