பீப் சாங் சர்ச்சையை அவ்வளவு எளிதாக சிம்புவால் கடந்து செல்ல முடியாது. ஆனால், அதைப்பற்றி கேட்டால் இப்போதும் தைரியமாக பதில் சொல்கிறார் அவர். ‘மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத் தான் எழுதினேன். இந்த தலைமுறையினருக்கு விருப்பம் இல்லாததை எழுதக்கூடாது என்பதில் நேர்மையாக இருக்கிறேன். வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள். மக்கள் விரும்பும் நல்ல படைப்புகளை கொண்டாட வேண்டும். நான் மக்களிடம் ஓட்டுக்கேட்பதற்காக அந்தப்பாட்டை எழுதவில்லை. இந்தத் தலைமுறையினர் விரும்புவதை எழுதுவதில் தவறில்லை. ஏனென்றால் இது கலியுகம். இங்கே மோசமான படைப்பு, தேவையில்லாத படைப்பு என்பதெல்லாம் கிடையாது. எல்லாமே நல்ல படைப்புகள் தான். இப்போ கெட்டவனுக்குத்தான் மாஸ். நல்லவனுக்கு மாஸ் இல்ல. மக்கள் மாறிட்டாங்க. இப்போ நான் தொடர்ந்து சாமி படமா எடுத்துக்கிட்டு இருக்கமுடியாது’ என்கிறார் சிம்பு.