சினிமா

"நீதான் என் வாழ்வின் வெளிச்சம்" - மனைவியை வாழ்த்தும் சாந்தணு

"நீதான் என் வாழ்வின் வெளிச்சம்" - மனைவியை வாழ்த்தும் சாந்தணு

webteam

சாந்தணு பாக்யராஜூக்கு இந்த ஆண்டு திரைவாழ்வில் மிக முக்கியமானதாக இருக்கிறது. மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கும் மகிழ்ச்சியில் உள்ள அவர், வெள்ளியன்று திருமண ஆண்டு விழாவை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.

சமூகவலைதளத்தில் "உன் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும்" என்று காதல் மனைவி கீர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சாந்தணு, கூடவே அழகான ரொமாண்டிக் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த இளம் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைச் சொல்லவும் மறக்கவில்லை.

தன் பிரியத்திற்குரிய மனைவியை, தன் வாழ்வின் ஒளியாகப் பார்க்கும் சாந்தணுவுக்கு நன்றி கூறியுள்ள கீர்த்தி, எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி. எல்லோருடைய ஆசிகளுக்கும் அன்புக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். குஷ்பு, சைந்தவி உள்பட பல பிரபலங்களும் சாந்தணு தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.