ஓஎம்ஆர் பகுதியில் புதியதாக ஒரு ஜவுளி கடையை திறந்து வைத்தற்காக ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கான விளக்கத்தை ஓவியா தரப்பு தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியாவின் மார்க்கெட் எகிறிள்ளது. அவருக்கு கிடைத்திருக்கும் பிரபலத்தை பயன்படுத்தி கொள்ள விரும்பிய ஜவுளிகடை நிறுவனம் அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்து திறப்பு விழாவுக்கு அழைத்துள்ளதாக செய்தி பரவி வந்தது. அதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் வியந்துபோய் கருத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பளம் குறித்து ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு ஏற்றபடிதான் சம்பளம் பெறப்பட்டுள்ளது என்றும், ரூ. 1.5 கோடி என்பது எல்லாம் உண்மை இல்லை என்றும் ஓவியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை.