சினிமா

‘காலா’ வெளியீட்டை தள்ளி வைத்து இருக்கலாம் - சரத் குமார்

‘காலா’ வெளியீட்டை தள்ளி வைத்து இருக்கலாம் - சரத் குமார்

rajakannan

தூத்துக்குடி விவகாரம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘காலா’ பட வெளியீட்டை தள்ளி வைத்து இருக்கலாம் என்று சரத் குமார் கூறியுள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் ஜூன் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ‘காலா’ படம் வெளியாவதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதேபோல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி போராட்டம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். போராட்டம் குறித்த ரஜினியின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழகத்திலும் ரஜினிக்கு ஒருவிதமான எதிர்ப்பு மனநிலை நிலவுவதாக கூறப்படுகிறது. ‘காலா’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவும் இதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “தற்போது தூத்துக்குடி விவகாரம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘காலா’ பட வெளியீட்டை தள்ளி வைத்து இருக்கலாம்” என்று கூறியுள்ளார். 

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்தது குறித்து கூறுகையில், “கட்சியே துவங்காத நிலையில் கமலஹாசன் கர்நாடக சென்று வந்தது வேடிக்கையாக உள்ளது. இது மிகவும் கண்டனதிற்கு உரிய செயல். மக்களின் பிரதிநிதியாக சென்றதாக கமலஹாசன் சொல்வதை ஏற்க முடியாது, பிரதிநிதி என்று யார் முடிவு செய்வது” என்றார் சரத்குமார்.