சமந்தா எக்ஸ் தளம்
சினிமா

மலையாள சினிமா|புயலைக் கிளப்பும் பாலியல் புகார்கள்.. தெலுங்கு நடிகைகளுக்கும் பாதிப்பு.. சமந்தா பதிவு!

Prakash J

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, மலையாள திரையுலக பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கெனவே புகார் தெரிவித்த நடிகைகளை நேரில் சந்தித்தும், தொலைபேசியில் அழைத்தும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வந்தனர்.

அதன்படி, நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், பேசுபொருளாகி வருகிறது.

இதையும் படிக்க: ரத்து செய்யப்பட்ட பிரஷர் குக்கர்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்த அமேசான்..பயனரின் பதிவு வைரல்!

அந்த வகையில் ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகை சமந்தா பாராட்டி இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவர் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம்.

இதேபோல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக 'வாய்ஸ் ஆப் வுமன்' அமைப்பு 2019-இல் உருவாக்கப்பட்டது. கேரளாவைப்போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணையின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என சமந்தா அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஆடி கார் மீது லேசாக மோதிய ஓலா கேப் கார்| டிரைவரை தூக்கிப் போட்டு தாக்கிய கொடூரம் #ViralVideo

முன்னதாக, வங்காள நடிகையான ரிதாபாரி சக்ரவர்த்தியும் இதேபோல பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், கேரளத்தில் நடப்பதைப் போலவே பெங்காலி திரைத்துறையில் தனக்கும் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், திரைத்துறையே பாலியல் தொழில் நடக்கும் விடுதிபோல இருக்கிறது என்றும் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்; கேள்விக்குப் பதிலளியுங்கள்” - மம்தா பானர்ஜிக்கு பாஜக பதில்!