சினிமா

"டியூப்லைட் திரைப்படம் - பெயரைப் போல லேட்டாதான் எரியும்...."

webteam

ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ள டியூப்லைட் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை என்பதால் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகை சமயங்களில் புதிய படங்களை வெளியிடுவதை சல்மான்கான் கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறார். பஜிரங்கி பாய்ஜானின் இமாலய வெற்றியை தொடர்ந்து அதே குழுவினர் தற்போது டியூப்லைட் என்ற படத்தை இயக்கி வெளியிட்டுள்ளனர். பஜிரங்கி பாய்ஜானில் வித்தியாசமான பாணியில் சல்மான்கான் நடித்திருந்தது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதே பாணியில் தற்போது டியூப்லைட் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை சல்மான்கான் ஏற்றுள்ளார். இன்று வெளியான இப்படம் முதல்நாள் வசூல் முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ரம்ஜான் நோம்பு சமயம் என்பதால் இஸ்லாமியர்கள் யாரும் திரையரங்குகளுக்கு செல்லாத நிலையில், ஓபனிங் பிரம்மாண்டங்கள் ஏதுமில்லாமல் முதல்நாள் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ரம்ஜான் பண்டிகை அன்று படம் ரிலீசாகும் நிலையில், தற்போது வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே படம் ரிலீசானதே டியூப்லைட் லேட்டாக எரிவதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.