சினிமா

ரூ 1000 கோடி பட்ஜெட் மகாபாரதத்தில் மோகன்லால் பீமன்

ரூ 1000 கோடி பட்ஜெட் மகாபாரதத்தில் மோகன்லால் பீமன்

Rasus

ஞானபீட விருது வென்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவனின் பிரபல நாவல் ரண்டாமூழம். மகாபாரதக் கதை பீமனின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டது இந்த நாவல்.

இந்த நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டார் படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீகுமார் மேனன். பிரபலமான விளம்பரப் படங்களை எடுத்தவர் இவர்.

வாசுதேவன் நாயரிடம் தனது ஆசையை அவர் வெளிப்படுத்த, வாசுதேவன் நாயர் தான் எழுதிய நாவலை திரைக்கதையாக்கித் தந்தார். நான்கு மாத கால அவகாசத்தில் தனது 600 பக்க நாவலை 190 பக்க திரைகதையாக மாற்றித் தந்திருக்கிறார் வாசுதேவன் மேனன்.

சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டும் சிறந்த நடிகர்களை கொண்டும் இந்தப் படம் உலகளாவிய படமாக எடுக்கப்படும் என்றும் இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2018 செப்டம்பரில் தொடங்குவதாகவும் தெரிவித்தார் ஸ்ரீகுமார் மேனன்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படம் 2020 ஆண்டு வெளியாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ 800 முதல் ரூ 1000 கோடி வரை இருக்கும். அனைத்து இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும். இந்த படத்தில் உலகத்தின் சிறந்த நடிகர்கள் பல கதாப்பாத்திரங்களில் நடிப்பார்கள், எனவும் ஸ்ரீகுமார் தெரிவித்தார்.