கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்கள் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியுள்ளன. இதன்காரணமாக ஆர்ஆர்ஆர் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாலும், தமிழகம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும், ஆர்ஆர்ஆர் படத்தின் ரீலிஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழக அரசின் நேற்றைய அறிவிப்பின்படி, ஜனவரி 10ம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாவது சந்தேகம் தான் என தகவல் வெளியாகியுள்ளது.