சினிமா

முடிவுக்கு வந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு தகராறு

முடிவுக்கு வந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு தகராறு

நிவேதா ஜெகராஜா

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் வெளியிடுவது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு விநியோகஸ்தர்களுக்கு இடையே இருந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 7-ம் தேதி வெளியாகிறது. இந்தியா முழுவதும் வெளியாகும் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான உரிமையை கைப்பற்றிய லைக்கா நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை என அனைத்து விநியோக ஏரியாவின் உரிமைகளை விற்பனை செய்துவிட்டது.

இந்த நிலையில் கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியின் சில திரையரங்குகளில் கர்நாடக விநியோகஸ்தர் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை கன்னட மொழியில் வெளியிட முயற்சித்தார். இதனால் தமிழக-கர்நாடக விநியோகஸ்தர்கள் இடையே இதுதொடர்பான பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னை தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள தமிழக திரையரங்குகள் அனைத்திலும் தமிழ் மொழியிலேயே ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.