ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா  pt web
சினிமா

டும் டும் டும்..! சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி!

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி தொலைக்காட்சித் தொடர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

Angeshwar G

நாகேஷ், செந்தில், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் உடல்மொழியால் சிரிக்க வைத்தார்கள். ரைமிங் மற்றும் டைமிங் நகைச்சுவைகளால் சினிமாவில் கலக்குபவர்கள் சந்தானம், யோகிபாபு. ஆனால், உடல்மொழி நகைச்சுவை மற்றும் ரைமிங் - டைமிங் நகைச்சுவை ஏதும் இல்லாமல் கூட வாய்மொழியால் சிரிக்க வைக்கலாம் என்பதற்கு உதாரணம் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சனுக்கு மற்றும் முகவரி தரவில்லை. நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் முகவரி கொடுத்தது. அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் தியேட்டரையே சிரிப்பலையால் அதிரவைத்தார். டாக்டர் திரைப்படத்தை பாராட்டிய அனைவரும் ரெடினை குறிப்பிடாமல் இருந்ததில்லை.

தொடர்ச்சியாக எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், ஜெயிலர் என உச்சநட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி கரம்பிடித்துள்ளார். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் எளிமையான முறையில் அவர்களது திருமணம் நடைபெற்றது. இதில், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. நட்சத்திர ஜோடியான ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை சங்கீதா, சின்னத்திரை மட்டுமின்றி மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனை நடிகரும் நடன இயக்குநரான சதீஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்கள் சொல்லியுள்ள சதீஷ், இது இது உண்மையான திருமணம் என்றும் படப்பிடிப்பு அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.