ஜெர்மனிக்கு கடத்தப்பட இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ராமர் கற்சிலையை தமிழக் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர்.
சென்னை ஆலந்தூரில் கடத்த இருந்த ராமர் கற்சிலையை சிலைத் தடுப்பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளனர் காவல்துறையினர். ஆலந்துரில் உள்ள எஸ்.ஏ.எஸ்.எல் என்ற ஷிப்பிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டதில் கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டடி அகலமும் ஓரடி உயரத்துடன் கூடிய தொன்மையான ராமர் கற்சிலைக் கண்டுபிடிக்கப்பட்டது.
கற்சிலை வைக்கப்பட்டதற்கான சரியான விளக்கமும் ஆவணங்களும் இல்லாததால் கைப்பற்றினர். சிலையின் இன்றைய மதிப்பு ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்று கருத்டப்படுகிறது