பிரபு சாலமன் இயக்கும் ’காடன்’ படத்துக்காக, பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ’தொடரி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வரும் படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோ. மற்றும் விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரேயா பில்கோன்கர், அஸ்வின் ராஜா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘காடன்’ என்றும் தெலுங்குக்கு ’ஆரண்யா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர்.
ராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில், சாண்டோ சின்னப்பா தேவர், 1971 ஆம் ஆண்டு இந்தியில் தயாரித்த படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. அவர் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இந்தப் படம் பின்னர் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் ’நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
(ஸ்ரேயா பில்கோன்கர்)
இந்தக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இப்போது, பிரமாண்ட ஆக்ஷன் காட்சியை, மும்பை பிலிம்சிட்டியில் படமாக்கி வருகின்றனர்.
(பிரபு சாலமன்)
‘’இதற்காக 8 கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராணாவுடன் வில்லன்கள் மோதும் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து அவர் நடித்து வருகி றார். இதுவரை இல்லாத அளவு இந்த காட்சிகள் பேசப்படும். டெக்னிக்கலாகவும் இந்தப் படம் வேறு தரத்தில் இருக்கும்’’ என்று படக்குழுத் தெரி வித்துள்ளது.