சினிமா

"கடைசி யானையை காப்பாத்துற வரைக்கும் போராட்டம் ஓயாது" - காடன் ட்ரெய்லரில் மிரட்டும் ராணா

webteam

விஷ்ணு விஷால், ராணா நடிப்பில் உருவான காடன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

‘மைனா’‘கும்கி’ ‘தொடரி’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமன் காடன் படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், ராணா டகுபதி, புல்கிட் சாம்ராட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகிறது. வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

3 நிமிட அளவில் வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் மனிதர்கள் எப்படி காட்டை ஆக்கிரமிக்கிறார்கள், அதனால் யானைகள் எவ்வாறான இன்னல்களை சந்திக்கின்றன, யானைகளை காப்பாற்ற ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் சந்திக்கும் போராட்டங்கள் என காட்சிகள் நீள்கிறது.