சினிமா

திருநங்கையாக நடிப்பது சவாலானது: ரமேஷ் திலக்

திருநங்கையாக நடிப்பது சவாலானது: ரமேஷ் திலக்

webteam

தமிழில், சூது கவ்வும், நேரம், வாயை மூடி பேசவும், காக்கா முட்டை உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் திலக். இவர், திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகக் கூறினார். 

அவர் மேலும் கூறும்போது, ‘காமெடி, மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். இப்போது ரஜினியுடன் ’காலா’ படத்தில் நடிக்கிறேன். ஜெயம் ரவியுடன் ’டிக் டிக் டிக்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். நவீன தொழில்நுட்படம் தெரிந்த ரிச்சி தெரு பையனாக நடித்திருக்கிறேன். அடுத்து, ’நல்ல நாள் பார்த்து சொல்லு’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ உட்பட சில படங்களில் நடிக்கிறேன்.
காமெடி கேரக்டர்களில் விரும்பி நடிக்கிறேன். எனக்கு வில்லனாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அதோடு திருநங்கை கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்த சில திருநங்கைகள், சினிமாவில் தங்களை சரியாகக் காண்பிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். அவர்களின் உடல்மொழி, உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவற்றைப் பின்பற்றி நடிப்பது சவாலானது. அதனால் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’ என்றார்.