நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார்.
பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்திக்காத நிலையில், 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. காலை 8 மணியில் இருந்து மாலை 3 மணி வரை நாள்தோறும் 1,000 ரசிகர்களை அவர் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.
இதற்காக டிசம்பர் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும், 7 மணி முதல் மாலை 5 மணி வரை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பில் போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதே ராக்வேந்திரா மண்டபத்தில் ரசிகர்ளை சந்தித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று குறை கூறியிருந்தார். அத்துடன் போர் வரும் போது தயாராக இருங்கள் என்றும் தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.