சினிமா

”ஷாட் ரெடி என்றதும் நாம் எழுந்திருக்கும் முன்பே 35 அடி போயிருப்பார் ரஜினி சார்” - சூரி

”ஷாட் ரெடி என்றதும் நாம் எழுந்திருக்கும் முன்பே 35 அடி போயிருப்பார் ரஜினி சார்” - சூரி

sharpana

”‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என்று சொன்னால், நாம் எழுந்திருக்கும் முன்பே 35 அடி போயிருப்பார் ரஜினி சார்” என்று வேலன் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார் நடிகர் சூரி.

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த முகேன் ராவ் நடித்துள்ள ‘வேலன்’ படத்தை அறிமுக இயக்குஅந்ர் கவின் இயக்கியுள்ளார். பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடந்தது. அதில், முகேன்ராவ், தயாரிப்பாளர் கலைமோகன் முபாரக், நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய நடிகர் சூரி,

”அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என சொன்னால், நாம் எந்திருக்கும் முன்பே 35 அடி போயிருப்பார் ரஜினி சார். அவருக்கு அந்த எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார். அதை இந்தக் கல்லூரியில் பார்க்கிறேன். பிரின்ஸிபல் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார். சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை. முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார். வலிமை படம் விநியோகம் செய்கிறார். அவர், தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. இப்படத்தின் இயக்குநர் அன்பு தம்பி கவின் சிறுத்தை சிவாவிடம் உதவியாளர். மிக சிறந்த உழைப்பாளி. அவரிடம் இருந்து வெளியில் வந்து, முதல் படம் இயக்குவது கவின்தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும்.

முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதிதாக வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார், அவருக்கு பெரிய நன்றி. இந்தப்படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.