விபிஎஃப் கட்டண தள்ளுபடி காரணமாக தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவரும் என்றும், இறுதிகட்ட சினிமா பணிகளை செய்ய முடியாமல் தவிக்கும் திரைத்துறை பணிகளை மீண்டும் துவங்க இது ஊக்கசக்தியாக இருக்கும் என்றும் கியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கியூப் சினிமா, டிஜிட்டல் சினிமா உருவாக்கத்திற்காக பணிகளை செய்துத்தரும் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் தற்போது விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது, இந்த தள்ளுபடி அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் நவம்பர் மாதம் முழுவதற்கும் பொருந்தும். கொரோனா நெருக்கடி காரணமாக சினிமாத்துறை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது, இதன்காரணமாக சினிமாவை சார்ந்த பல தொழில்களும் முடங்கியுள்ளது, இதனை மீட்பதற்காக கியூப் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த விபிஎஃப் கட்டண தள்ளுபடி காரணமாக தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவரும் என்று நம்புகிறோம், இறுதிக்கட்ட சினிமா பணிகளை செய்ய முடியாமல் தவிக்கும் திரைத்துறையில் பணிகளை மீண்டும் துவங்க இது ஊக்கசக்தியாக இருக்கும். தடவாள கட்டணங்கள், கண்டெட் டெலிவரி மற்றும் நிர்வாகத்திற்கான கட்டணத்தை மட்டும் தயாரிப்பாளர்கள் செலுத்தவேண்டும்.
தீபாவளி பண்டிகையை திரையரங்கில் பார்வையாளர்களுடன் கொண்டாடுவதற்கு அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளனர்