சினிமா

'புஷ்பா' பாடலை மராத்தி வெர்ஷனில் பாடி அசத்திய போக்குவரத்து காவலர்

'புஷ்பா' பாடலை மராத்தி வெர்ஷனில் பாடி அசத்திய போக்குவரத்து காவலர்

JustinDurai

புனேயை சேர்ந்த போக்குவரத்து காவலரான அதிஷ் காரடே, 'புஷ்பா' திரைப்படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலை மராத்தி வெர்ஷனில் பாடி யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் 'சூப்பர் ஹிட்' ஆனதுடன், சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகவும் பரவியது. மேலும் 'புஷ்பா' படப் பாடல்களை பலரும் 'கவர் சாங்'ஆக உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புனே காவல் துறையைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான அதிஷ் காரடே என்பவர் 'புஷ்பா' படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலை மராத்தி வெர்ஷனில் பாடி, யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். பாடல் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவரான போக்குவரத்து காவலர் அதிஷ் காரடே, தனது யூடியூப் சேனலில் திரைப்பட பாடல்களை 'கவர் சாங்'காக உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். அதிஷ் காரடேவின் இசையார்வத்தையும், ஈடுபாட்டையும் கண்டு பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.