சினிமா

'குட் லக் சகி' வெளியீடு ஓடிடியா, தியேட்டரா? - குழப்பத்தில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்

'குட் லக் சகி' வெளியீடு ஓடிடியா, தியேட்டரா? - குழப்பத்தில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்

நிவேதா ஜெகராஜா

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த தெலுங்கு படமான 'குட் லக் சகி' வெளியீடு, தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

தமிழ் சினிமாவை போலவே, தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரின் நடிப்பில் ஏராளமான படங்கள் தயாராகி வருகிறது. தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் 'குட் லக் சகி'. 'ஈரம்' ஆதி மற்றும் ஜெகபதி பாபு போன்றோர் நடிக்க, கீர்த்தி சுரேஷ் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விளையாட்டு - காதலை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலீஸுக்கு தயாராக இருக்கும் இந்தப் படம் ஓடிடி தளத்தில் விரைவாக வெளியாக இருப்பதாக நேற்று ஆந்திர ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதையடுத்து ரசிகர்களும் இந்தப் படத்தை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். இந்த நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்த தகவலை வதந்தி என்று கூறி, செய்தியை மறுத்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுதீர் சந்திரா, இந்த வதந்திகளைக் கண்டித்துடன் ''ஊடகங்களில் நாங்கள் ஓடிடி தளத்தில் படத்தை ரீலீஸ் செய்யப்போவதாக வதந்திகள் பரவி வருகிறது. தயவுசெய்து அவ்வாறு சொல்வதைத் தவிர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அது எதுவுமே உண்மை இல்லை. அத்தகைய திட்டங்கள் ஏதேனும் இருந்தால் நாங்களே அப்டேட் கொடுப்போம்.

எல்லோரும் வீட்டிலேயே இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் படம் எந்த மீடியத்தில் வெளியாக இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். நாகேஷ் குக்குனூர் என்ற இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.