சினிமா

இன்ஸ்டா ஸ்டோரியில் தமிழக அரசு பள்ளி ஆசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா..!

இன்ஸ்டா ஸ்டோரியில் தமிழக அரசு பள்ளி ஆசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா..!

webteam

2000-ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதற்குப் பிறகு திரையுலகில் தமிழ் படம் மூலமாக கால்பதித்தார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் அவர், பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கி முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார்.

அதன்பின்னர் ஹாலிவுட் படங்களிலும் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும்
நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அமெரிக்காவில் இருந்தாலும் இந்தியா தொடர்பான கருத்துகளை அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிப்பார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இடம் பிடித்துள்ளார். இந்த வாரம் என்னைக் கவர்ந்த சில விஷயங்கள் என்ற தலைப்பில் அவர் சில செய்திகளை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு செய்தியாக இடம் பிடித்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  ஜெயக்குமார் ஞான்ராஜ். பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அவர் புதிய செல்போன்களை வழங்கியுள்ளார்.

செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் கெட்டுப்போவதை இது தடுக்கும் என தலைமையாசிரியர் இந்த செயலை செய்துள்ளார் என பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா குறிப்பிட்ட ஸ்டோரியை குறிப்பிட்டு பலரும் ஆசிரியருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்