தமிழில், ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா திவிவேதி. கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். படங்களில் நடிக்காமல் இருந்த இவர், சமீபத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இவர், இப்போது ’ஹெளரா பிரிட்ஜ்’ என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தை லோஹித் இயக்குகிறார். இவர், கன்னடத்தில் உருவான ’மம்மி’ என்ற படத்தை இயக்கியவர். இதிலும் பிரியங்கா நடித்திருந்தார்.
ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கபிலன் வைரமுத்து வசனம், பாடல்கள் எழுதுகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதையான இதன் படப்பிடிப்பு, செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது.