லிங்குசாமி தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கி 2012-ல் வெளியான படம், ’கும்கி’. விக்ரம் பிரபு, லஷ்மி மேனன், ஜோ மல்லூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஆறு வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை ’கும்கி 2’ என்ற பெயரில் இயக்கி வருகி றார் பிரபுசாலமன். இதன் இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவுற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் பல படங்களின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ’கும்கி’ படத்துக்கும் ’கும்கி 2’ படத் துக்கும் கதையளவில் சம்மந்தம் இல்லையாம்! யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை வைக்க வேண்டி யிருக்கிறது என்கிறார் பிரபு சாலமன்.
இந்தப் படத்தில் மதியழகன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகி முடிவாகவில்லை. மற்றும் ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ’கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். உன்னி கிருஷ்ணன் என்ற யானை முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. ஒளிப்பதிவு, சுகுமார். இசை, நிவாஸ் கே. பிரசன்னா. பென் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பாக ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
படம் பற்றி பிரபுசாலமன் கூறும்போது, ’கும்கி 2 பிரமாண்டமான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், சிறுவனுக்கும் உருவாகும் நட்பு, அவர்கள் பெரியவர்களாகும் வரை தொடர்கிறது. அதுதான் கதை. குட்டி யானைக்காக இலங்கை, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான நாடுகளில் அலைந்து திரிந்தோம். குட்டி யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கவில்லை. பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் அமைந்து இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டோம். யதார்த்தமான படமாக இது இருக்கும்’ என்றார்.
இதற்கிடையே ’ஹாத்தி மேரே சாத்தி’ என்ற இந்தி படத்தின் ரீமேக்கையும் இயக்கி வருகிறார் பிரபுசாலமன். இதுவும் யானையை மையப்படுத் திய படம்தான். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோவாக நடிக்கிறார். விஷ்ணு விஷால் உட்பட பலர் நடிக்கின்றனர். இதை ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு தமிழில் காடன் என்றும் தெலுங்கில் ஆரண்யா என்றும் டைட் டில் வைக்கப்பட்டுள்ளது.