பழம்பெரும் பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, பெங்காளி என பல இந்திய மொழிகளில் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாக கொடிக்கட்டி பறந்தவர் வாணி ஜெயராம்.
மூன்று தேசிய விருது, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா, குஜராத் என பல மாநில விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளை குவித்தவர் வாணி ஜெயராம். லைத்துறைக்கு அவர் ஆற்றிய பணிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு பத்ம பூஷன் விருதை கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவித்தது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வாணி ஜெயராம் உயிரிழந்ததாக இன்று பிற்பகல் 1.35 மணியளவில் அறிவிக்கப்பட்டது. வாணி ஜெயராமின் மறைவை அடுத்து திரையுலகத்தினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வாணி ஜெயராமின் மரணம் இயற்கை மாறானதாக உள்ளது என காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வாணி ஜெயராம் வீட்டில் பணியாற்றும் மலர்க்கொடி என்ற பெண் பேசியுள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பியிருக்கிறது.
அதன் பிறகு அதே குடியிருப்பில் உள்ள கீழ் வீட்டில் குடியிருப்பவரிடம் தெரிவித்தபோது, முதலில் அக்கம்பக்கத்தில் விசாரித்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுக்கலாம் என்றார்கள். இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனிடையே ஆழ்வார்பேட்டையில் இருந்த வாணி ஜெயராமின் தங்கை உமாவுக்கு தகவல் தெரிவிக்கவே அவரிடம் இருந்த மாற்றுச் சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தோம். அப்போது வீட்டில் வாணி ஜெயராம் தரையில் படுத்தபடி கிடந்தார். அவரது நெற்றியில் அடிபட்டு இருந்தது.” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அந்த பணிப்பெண் மலர்க்கொடி, “காலை 10 மணியளவில் வந்து வேலையெல்லாம் முடித்துவிட்டு 12 மணிக்கு சென்றிடுவேன். 10 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றி வந்தேன். அவருக்கு எந்த உடல்நலக் கோளாறும் இருக்கவில்லை. சாதாரண நிலையிலேயே இருந்தார். பத்ம விருது அறிவிக்கப்பட்ட பிறகு நிறையே பேர் வாழ்த்து தெரிவித்து செல்வார்கள். எனக்கு அம்மா மாதிரி அவர். நல்லபடியாகவே பேசிப்பழகுவார்.” என்று தெரிவித்திருக்கிறார்.
கணவர் ஜெயராம் உயிரிழந்த பிறகு நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியாகவே வசித்து வந்திருக்கிறார் வாணி ஜெயராம். இந்த நிலையில்தான் இன்று அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறைந்த வாணி ஜெயராமின் உடலை மீட்ட ஆயிரம் விளக்கு சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மோகன் தாஸ் தலைமையிலான போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே வாணி ஜெயராமின் இறப்பு குறித்த விவரம் தெரியவரும் என்பதால் இயற்கைக்கு மாறான மரணம் என்றே வழக்குப் பதிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வாணி ஜெயராம் இல்லத்தில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதே வேளையில், தடவியல் நிபுணர்களும் வாணி ஜெயராம் வீட்டை ஆய்வு செய்து வருகிறார்கள்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/h-qCo5z-cWE" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>