சினிமா

சினிமாவில் புழங்கும் கறுப்பு பணத்தை ஒழியுங்கள்: சிம்பு வேதனை

சினிமாவில் புழங்கும் கறுப்பு பணத்தை ஒழியுங்கள்: சிம்பு வேதனை

webteam

அதிரடியான தன் பேச்சுக்களால் ஒட்டுமொத்த திரையுலக கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிம்பு. 

“கறுப்பு பணமே இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வாருங்கள். தியேட்டரில் எத்தனை பேர் படம் பாக்குறாங்க? என்பது தெரிய வேண்டும். டிக்கெட் விலை எவ்வளவு ? ஒரு காட்சிக்கு எத்தனை பேர் வர்றாங்க? தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் கிடைக்குது? இந்த எல்லா விவரங்களும் ஹீரோக்கள், டைக்ரக்டர்களுக்கு  என எல்லோருக்கும் தெரியனும்?” அடுக்கடுக்காக யோசனைகளை சொல்லி ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் நடிகர் சிம்பு.

தயாரிப்பாளர் சங்கம் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்த போராட்டம் குறித்து இயக்குநர் சங்கம் ஆலோசனை நடத்தியது. அந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடியாக சிம்பு பங்கேற்றுப் பேசினார். இந்தச் சங்கத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையில் அவரும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அப்போதுதான் சிம்பு மேலான யோசனைகளை முன் வைத்து பேசினார்.

மேலும் “தமிழ் சினிமாவுல 10 பெரிய ஹீரோஸ்தான் இருக்காங்க. அவங்க சம்பளத்தை குறைப்பதால் ஒன்றுமே மாறிவிடாது. கடவுள் புண்ணியத்துல அந்தப் பத்து ஹீரோ பட்டியல்ல நானும் இருக்கேன். இங்க பிரச்னையே கறுப்பு பணம் புழக்கம்தான். சினிமா எடுக்க வர்றவங்க ஒயிட் மணியோட வாங்க. முறையா கணக்குக் காட்டுங்க. ஒழுங்க வரிக்கட்டுங்க. ஒயிட் மணி வந்துவிட்டாலே பல பிராப்ளம் சால்வ் ஆகிடும். எனவே தமிழ் சினிமாவில் புழங்கும் கறுப்பு பணத்தை முதல்ல ஒழியுங்கள்” என்று பேசி அதிர்ச்சி கொடுத்தார்.