உமா ரமணன்  முகநூல்
சினிமா

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

PT WEB

1977 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீகிருஷ்ணா லீலா படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இசை உலகில் அறிமுகமான உமா ரமணன், 1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தார். இவர் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.

பாடகி உமா ரமணன்

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் இசையில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ள உமா ரமணன், கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், ஒரு கைதியின் டைரி, திருப்பாச்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

வயது முதிர்வு காரணமாக திரைத்துறையை விட்டு விலகி இருந்த உமா ரமணன் சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு உமா ரமணன் உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என உமா ரமணனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உமா ரமணின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.