சினிமா

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தடை செய்க - பீட்டா கோரிக்கை

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தடை செய்க - பீட்டா கோரிக்கை

rajakannan

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மெளனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். பாண்டிராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. 

இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாக படத்தில் காளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, படத்திற்கு அளிக்கப்பட்ட தடையில்லா சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் விலங்கு நல வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நீதிமன்ற உத்தரவுகளின் படி மாடு காட்சிப்படுத்தும் விலங்குகளில் பட்டியலில் இல்லை. ஆனால், படத்தில் மாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தடுக்க அகில இந்திய விலங்கு நலவாரியம் தவறிவிட்டது’ என்று பீட்டா குறிப்பிட்டுள்ளது.  

முன்னதாக, ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், ‘படத்தில் இடம்பெற்ற ரேக்ளா போட்டியை மக்கள் அவ்வளவு ரசித்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதை படத்தில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டோம். பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு, மாடுகளை நாங்கள் அண்ணன், தம்பியாக பார்த்து வருகிறோம். எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு?’ என்று காட்டமாக பேசினார்.