சினிமா

’நோ மீன்ஸ் நோ’ என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை: டாப்ஸி

’நோ மீன்ஸ் நோ’ என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை: டாப்ஸி

webteam

நடிகை டாப்ஸி, தனது உடைகளை வாங்க வெளிநாடு செல்வது ஏன் என்று விளக்கம்  அளித்தார்.

தமிழில், ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட சில படங்களில் நடித்த டாப்ஸி, இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. மேலும் பல இந்தி படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது உடைகளை வெளிநாடுகளில்தான் வாங்குகிறேன் என்று கூறியிருந்தார். 

இது ஏன் என்று கேட்டபோது, ‘சினிமாவில் நடிப்பதற்கு முன் தோழிகளுடன் டெல்லி சாலைகளில் நடந்து செல்வேன், மால்களுக்கு செல்வோம். நல்ல ரெஸ்டாரன்ட்களை தேடி உணவு உண்போம். ஆனால், இப்போது முடியவில்லை. ரசிகர்கள் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அதை ஏற்றுகொள்கிறேன். வெளியிடங்களில் அவர்கள் அன்பு அதிகமாகும்போது, சிக்கலாகி விடுகிறது.

சினிமா நட்சத்திரங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. ’நோ மீன்ஸ் நோ’ என்பது ரசிகர்களுக்கு இன்னும் புரியவில் லை. இதனால் என் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இது தொந்தரவாக இருக்கிறது. இதனால், நான் உடைகளை கூட, வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன். அதுதான் சாத்தியமாகிறது.

நான் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள். எனது குடும்பத்தில் முதன்முறையாக, நான் தான் பிரபலமாகி இருக்கிறேன். அதனால் நட்சத்திர அந்தஸ்து பற்றி என் குடும்பத்தினருக்கு புரியவில்லை. அதை புரிய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.