அமரன் படத்திற்கு திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இந்த படம் வெளியாகியிருக்கிறது.
மிடுக்கான ராணுவ உடையுடன் உடல் எடையை அதிகப்படுத்தி, ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதே போல் இந்து ரெபேக்கா வர்கீஸாகவே வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி. இவர்களின் வாழ்க்கை பற்றி மட்டுமில்லாமல், ராணுவத்தில் இருக்கும் கஷ்டங்கள், ஒவ்வொரு வீரரும் நாட்டுக்காக தனது குடும்பத்தை பிரிந்து வாழ்வது என அனைத்து காட்சிகளிலும் கைத்தட்டல்களை வாங்கி வருகிறது அமரன். இந்த படத்தை போலவே ராணுவத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதில் முதலில் குறிப்பிட வேண்டியது URI - THE SURGICAL STRIKE. பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இந்தியாவில் வெளியான சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த உரி தாக்குதலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்தார் ஆதித்ய தார்.
ஒரு பக்கம் உரி தாக்குதல் என்றால், இன்னொரு பக்கம் கார்கில் போர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியானது SHERSHAAH. இந்த படம் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் BIO GRAPHY ஆக உருவாகியிருந்தது. நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, விக்ரம் பத்ராவாக நடித்திருப்பார். இந்த படம் தேசிய விருதும் வென்றது.
இந்திய படங்களை போல், உலக சினிமாவில் ராணுவ கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. பிராட் பிட் நடிப்பில் வெளியான FURY படத்தை இயக்குநர் டேவிட் ஐயர் இயக்கியிருந்தார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிகளுக்கு எதிராக சண்டையிட்ட ராணுவ அதிகாரிகளை இந்தப் படம் மையப்படுத்தியது.
இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியான FULL METAL JACKET திரைப்படம் இன்றும் சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. வியட்நாம் போருக்கு ராணுவ வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பது முதல், ராணுவத்தின் பல பக்கங்களை இந்த படம் பேசும். 1979ஆம் ஆண்டு வெளியான THE SHORT TIMERS நாவலை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்திருந்தார் ஸ்டான்லி குப்ரிக்.
ஸ்டான்லி குப்ரிக் போல் ஸ்டீவன் ஸ்பெல்பெர்கின் ராணுவ படமும் மிகவும் பிரபலம். அவரது இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு வெளியான SAVING PICTURE RYAN திரைப்படம் சிறந்த ராணுவ திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு வந்த பல ராணுவ படங்களுக்கு, இந்த படம் இன்ஸ்பிரேசன் என பல இயக்குநர்கள் கூறியிருக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் PATTON, WAR, PALTAN, GREYHOUND என பல திரைப்படங்கள் ராணுவத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செய்திருக்கின்றன.