சினிமா

டிஜிட்டல் ஓவியத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்

டிஜிட்டல் ஓவியத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்

webteam

வீட்டில் யாரும் சும்மா இருக்கவில்லை. அதுவும் கலையுலக பிரபலங்கள் ஊரடங்கு காலத்தில் பிட்னெஸ், சமையல், ஆர்ட் என புதிய விஷயங்களில் கவனம் செலுத்திவந்துள்ளனர். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆர்வத்துடன் டிஜிட்டல் ஆர்ட் கற்றுவந்திருப்பது அவரது சமூகவலைதளப் பதிவின் வழியாக தெரியவந்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் ஒவ்வொரு நாளும் பணிபுரியும் நாளே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"என் இலக்கை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறேன். என் மொபைல் போனின் மூலம் டிஜிட்டல் கலையை முயற்சி செய்கிறேன். வலிமை நம்முடன் இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். பி.சி.யின் டிஜிட்டல் ஓவியத்தைப் பார்த்து ரசித்துள்ள இயக்குநர் ராஜிவ் மேனன் பாராட்டியுள்ளார்.

இதற்கிடையே, மீண்டும் பரபரப்பான ஒளிப்பதிவு பணிக்கு பி.சி. சென்றுவிட்டார். நிதின் மற்றும் கீர்த்திசுரேஷ் நடிக்கும் ரங் தே படப்படிப்பில் இருக்கிறார். "அனைத்துப் பாதுகாப்புகளுடனும் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன். இந்த வேகத்திற்கு இணை ஏதுமில்லை" என்றும் பதிவிட்டுள்ளார். எப்போதும் அதிகம் பேசாமல் தன் கலையில் செழுமை சேர்க்கும் இந்த குறைந்த ஒளியில் வித்தைகள் புரியும் ஒளிப்பதிவாளர் டிஜிட்டல் ஓவியத்தில் ஆர்வம் கொண்டுள்ளார்.